மட்டக்களப்பில் சைக்கிள் திருடியவர் கைது!
மட்டக்களப்பு நகரில் இரு சைக்கிள்களை திருடிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம் (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் புதூரைச் சேர்ந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
திருட்டு
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றிற்கு நபரொருவர் சைக்கிளில் சென்று அதனை அங்கு நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று வெளியே வந்து பார்த்த போது அங்கு நிறுத்தி வைத்த சைக்கிள் காணாமல் போயுள்ளது.
இதனை அறிந்து கொண்ட சைக்கிள் உரிமையாளர் அந்த பகுதியில் தேடிய போது சைக்கிள் திருடியவர் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதை தொடர்ந்து சைக்கிளை திருடியவரை அடையாளம் கண்டு கொண்டனர்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இதனை தொடர்ந்து நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடிய ஒரு சைக்கிளை 18 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்ததாகவும் அடுத்த சைக்கிளை 5 ஆயிரம் ரூபாவுக்கு ஈட்டுகடை ஒன்றில் ஈடு வைத்துள்ளமை தெரிய வந்தது.
இதனையடுத்து இரு சைக்கிள்களையும் மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
