தமிழரசு கட்சியிலிருந்து பலர் வெளியேற்றப்பட காரணம்: அம்பலமாகும் கருத்துக்கள்
வடக்கிலும் கிழக்கிலும் இயங்கிவந்த தமிழ் தேசியக் கட்சிகள் இனப் பிரச்னைக்கு தீர்வை மையமாகக் கொண்ட அரசியலிலேயே இத்தனை ஆண்டு காலமாக ஈடுபட்டுவந்தன.
இனப் பிரச்னைக்கு எவ்விதத் தீர்வையும் முன்வைக்காத தேசிய மக்கள் சக்திக்கு (என்பிபி) இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, சமூக மேம்பாடு - பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு அரசியலை நோக்கி வடக்கு நகர்கிறதா என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.
சித்தாந்தங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு, அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்னைகளைக் கவனிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என தமிழரசுக்கட்சியின் சில முக்கிய தரப்புகள் தெரிவித்திருந்தன.
மேலும், தமிழ் தேசியக் கட்சிகளிடமிருந்த ஒற்றுமையின்மை, தலைமைத்துவ வெற்றிடம் ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில் தேசிய மக்கள் சக்தியை நோக்கி மக்கள் திரும்பிவிட்டதாகவும் சில கருத்துக்கள வெளிவர ஆரம்பித்தன.
இது தமிழ் தேசியத்தின் பெரிய கட்சிகளுடைய தவறுகளின் விளைவு என கருதப்பட்டாலும், தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிறிய தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதும் காரணமாகிறது.
குறிப்பாக தமிழ் தேசியத்தின் முக்கிய கட்சியான தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு நிலை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளதோடு, நீதிமன்ற நிலவரங்களையும் முன்னெடுத்திருந்தன.
அத்தோடு சில முக்கிய தரப்புக்களின் வெளியேற்றம் தொடர்பான அறிவிப்புக்களும் வெளிவந்திருந்தன.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்சின் நேரலையின் மூலம் சுவாமி சங்கரானந்தா - (கனடா), இரானியேஸ் செல்வின் ( முன்னாள் மூத்த நிர்வாக சேவை அதிகாரி), பா. அரியநேத்திரன் - (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டக்களப்பு மாவட்டம்) ஆகியோர் கலந்து கொண்டு தெரிவிக்கும் சில கருத்துக்கள் இதே!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |