கிளப் வசந்தவின் படுகொலைக்கான காரணம் வெளியானது
மாக்கந்துரே மதுஷை கைது செய்ய பாதுகாப்பு படையினருக்கு தகவல் வழங்கிய முதல் நபர் என்ற காரணத்தினால் கிளப் வசந்த கொல்லப்பட்டதாக கஞ்சிபா இம்ரான் தெரிவித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மதுஷ் தொடர்பில் விசாரணை நடத்திய கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளும் கொல்லப்படுவார்கள் என கஞ்சிபானி இம்ரான் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரையின் பேரில், பொலிஸ் தலைமையகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல்
அதுருகிரியில் சுட்டுக்கொல்லப்பட்ட கிளப் வசந்தவின் சடலம் பொரளையில் உள்ள ஜயரத்ன மலர்சாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், மலர்சாலைக்கு மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அத்துருகிரிய பிரதேசத்தில் கடந்த (08) ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உள்ளிட்ட மேலும் ஒருவர் உயிரிழந்ததுடன், கிளப் வசந்தவின் மனைவி மற்றும் பாடகி சுஜீவா உள்ளிட்ட சிலர் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பலப்படுத்தல்
இந்த துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத்தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் பிற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகளை இன்று 13ஆம் திகதி மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
