துருக்கியில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு காரணம் இவர்கள் தான்: நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை
உலக அளவில் தாக்கம் செலுத்திய துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பில் அந்நாட்டு நீதித்துறை அதிகாரிகள் அதிரடி தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
துருக்கியில் நிலநடுக்கத்திற்கு ஈடுகொடுக்காத கட்டிடங்களால் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி நீதித்துறை அதிகாரிகள் கட்டிட ஒப்பந்ததாரர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை

இந்த நிலநடுக்கத்தில் சமீபத்தில் எழுப்பப்பட்ட கட்டுமானங்கள் கூட மொத்தமாக தரைமட்டமாகியுள்ள நிலையில், கட்டிட ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துருக்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
தெற்கு துருக்கியில் உள்ள அந்தாக்யா நகரில் இடிபாடுகளில் சிக்கி 156 மணிநேரம் உயிர் பிழைத்த 54 வயது மாலிக் மிலாண்டி என்ற சிரியா நாட்டவரை சீன மீட்புப் படையினரும் துருக்கிய தீயணைப்பு வீரர்களும் காப்பாற்றினர்.
இதற்கமைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாகாணங்களில் தரைமட்டமான ஆயிரக்கணக்கான கட்டிடங்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியானதற்கு காரணமானதாக கூறி 131 ஒப்பந்ததாரர்களை துருக்கி கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் நிலவரம்
துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.
சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகும், இடிபாடுகளில் இருந்து மேலும் பலரை உயிருடன் மீட்டுள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் பொறுப்பில் இருக்கும் எர்டோகன் தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால், கடும் நெருக்கடியை சந்திக்க உள்ளார்.
அதுமட்டுமின்றி, இன்னும் சில வாரங்களில் நாட்டை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவிருந்த நிலையில் ஜனாதிபதி எர்டோகனை இந்த நிலநடுக்கம் தடுமாற வைத்துள்ளது.
ஏற்கனவே விலைவாசி உயர்வு பண வீக்கம் என ஜனாதிபதி எர்டோகனின் ஜனாபிமானம் சரிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan