ஈரானுக்கு எதிர்பாராத தடையை விதித்த ட்ரம்ப்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்ற நிலை!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் திடீர் நடவடிக்கையால் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரானிய எரிபொருட்களை ஏற்றுமதி செய்வதற்காக பயன்படுத்தப்படும் 29 கப்பல்கள் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் அனைத்தின் மீதும் அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
இதனை தொடர்ந்து, முறைகேடான கப்பல் போக்குவரத்து நடைமுறைகள் மூலம் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்களைக் கடத்தியதாக குற்றம் சாட்டியே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை தெரிவித்துள்ளது.
குறிவைக்கப்படும் ஈரான்
shadow fleet என அடையாளப்படுத்துகின்ற, எண்ணெய் நிறுவனங்களில் இருந்து ஏற்றுமதிகளை முன்னெடுக்கும் கப்பல்களுக்கே அமெரிக்கா தடை விதித்துள்ளது.

குறித்த கப்பல்கள் அனைத்தும் காலாவதியானவை, அவைகளின் உரிமையாளர் யார் என்பதை உறுதி செய்ய முடியவில்லை, எண்ணெய் நிறுவனங்களுக்கும் பல துறைமுகங்களுக்கும் தேவையான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்யத் தேவையான உயர்தர காப்பீட்டுப் பாதுகாப்பு இல்லாமல் செயல்படுபவை என அமெரிக்கா குற்றம் சாட்டுகின்றது.
இதற்கிடையில், அமெரிக்க கருவூலத் துறை ஈரானின் இராணுவ மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தும் பெட்ரோலிய வருவாயைத் தொடர்ந்து முடக்கும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பயங்கரவாதப் பிரதிநிதிகளுக்கு அது அளிக்கும் ஆதரவு ஆகிய காரணங்களுக்காக, ஈரான் மீது தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri