சமாதான ஒப்பந்தம் குறித்து உக்ரைன் நம்பிக்கை வெளியிட்டுள்ள ட்ரம்ப்
சமாதான ஒப்பந்தத்தில் ‘உக்ரைன் விரைவாக நகரும்’ என்று தான் நம்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், "ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் பேச்சுவார்த்தையாளர்கள், ஏதோ ஒன்றை நெருங்கி வருகிறார்கள்.
விரைவில் பேச்சுவார்த்தை
ஆனால் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ளும் பொறுப்பை உக்ரைன் மீது மீண்டும் சுமத்துவதாகத் தெரிகிறது. உக்ரைன் விரைவாக நகரும் என்று நான் நம்புகிறேன். ரஷ்யா அங்கு இருப்பதால் உக்ரைன் விரைவாக நகரும் என்று நான் நம்புகிறேன்.

மேலும் அவர்கள் அதிக நேரம் எடுக்கும் ஒவ்வொரு முறையும், ரஷ்யா தனது எண்ணத்தை மாற்றிக்கொள்கிறது” என குறிப்பிட்டு்ள்ளார்.
எனவே, மோதல் தீர்க்க “எளிதான ஒன்றாக” இருக்கும் என்று தான் நினைத்ததாகவும், ஆனால் “ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான “பகைமை மற்றும் வெறுப்பு” ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதை “நாம் நினைத்ததை விட சற்று கடினமாக்கியுள்ளது” என்றும் ட்ரம்ப் மேலும் தெரிவித்துள்ளார்.
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan