ஜனாதிபதியின் நோம்பு திறக்கும் நிகழ்வை புறக்கணித்த மத்திய கிழக்கு நாடுகள்!
ஜனாதிபதியின் நோம்பு திறக்கும் நிகழ்வை மத்திய கிழக்கு நாட்டுத் இராஜதந்திரிகள் மற்றும் ஈரான் தூதுவர் ஆகியோர் புறக்கணித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டிருந்தார் தொடர்ந்துரையாற்றிய அவர்,
அரசாங்கத்தின் இரட்டை வேடம்
ஈரானுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தில் இலங்கை மத்தியஸ்தம் வகிப்பதாக தெரிவித்திருந்தது.அப்படியென்றால் மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளின் தூதுவர்கள் ஏன் நோம்பு திறக்கும் நிகழ்வுக்கு வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
யுத்தத்தில் இலங்கை மத்தியஸ்தம் வகிப்பதாக கூறிக் கொண்டு இரட்டை வேடம் போடுவதாலேயே அவர்கள் வரவில்லை.

முஸ்லிம்களின் நாளாந்த ரமலான் நோன்பு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று முன்தினம் (18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இப்தார் நிகழ்வு நடைபெற்றது.
இதற்கு பல முக்கியஸ்தர்கள் வந்திருந்த நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் தூதுவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri