துருக்கி நிலநடுக்க பாதிப்பு! 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்
துருக்கி நிலநடுக்க பாதிப்பு காரணமாக 30 ஆண்டுகளுக்கு பின்னர் துருக்கி மற்றும் ஆர்மீனியா இடையேயான எல்லை பகுதி நிவாரண பொருட்களை கொண்டு செல்வதற்காக திறக்கப்பட்டுள்ளது.
துருக்கி - சிரிய நிலநடுக்க பாதிப்புக்கு காரணமாக இரு நாடுகளிலும் 28 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகின்றது.
மோதல்
இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஆர்மீனியா மற்றும் துருக்கி இடையேயான எல்லை பகுதி மனிதநேய உதவிகளுக்காக திறப்பட்டுள்ளதாக துருக்கியின் சிறப்பு பிரதிநிதி செர்டார் கிலிக் டுவிட்டர் செய்தியில் தகவல் வெளியிட்டுள்ளார்.
1915 ஆம் ஆண்டு நவீன துருக்கிக்கு முன்னர் அரசாட்சி செய்த ஓட்டோமன் காலத்தில், 15 இலட்சம் ஆர்மீனிய மக்கள் கொல்லப்பட்டமையினால் இரு நாடுகளுக்கும் இடையே பல தசாப்தங்களாக மோதல் நிலவியுள்ளது.
இதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ஆர்மீனியர்களுக்கும், துருக்கியின் அஜர்பைஜான் பழங்குடியின மக்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதினையடுத்து, இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை பகுதி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
