இலங்கையை உலுக்கிய சிறைச்சாலை வன்முறையின் பின்னணியில் பொலிஸார்! வெளியான அதிர்ச்சித் தகவல்

Sri Lanka Police Negombo Crime Branch Criminal Investigation Department Prisons in Sri Lanka Drugs
By Vethu Jul 09, 2026 08:32 AM GMT
Report

நீர்கொழும்பு சிறைச்சாலைகயில் ஏற்பட்ட பாரிய வன்முறை சம்பவம் இலங்கையை மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.

சிறைக்கைதிகளுக்கும், பொலிஸாருக்கும் இடையில் இடம்பெற்ற நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் சினிமாவை மிஞ்சும் வகையில் உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இந்நிலையில் இந்த வன்முறை சம்பவங்களுக்கான ஆரம்ப புள்ளியாக சிறைச்சாலைக்குள் பணியாற்றிய பொலிஸாரே உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ஈரானின் முக்கிய விமான தளத்தின் மீது தாக்குதல்.. தொடரும் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

ஈரானின் முக்கிய விமான தளத்தின் மீது தாக்குதல்.. தொடரும் அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை

வன்முறை சம்பவங்கள்

கைதிகள் முன்னிலையில் எச்சரிக்கும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்களே வன்முறை சம்பவங்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளதாக பிரபல ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சமுதித்தவுடனான நேர்காணலின் போது இந்த அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

இலங்கையை உலுக்கிய சிறைச்சாலை வன்முறையின் பின்னணியில் பொலிஸார்! வெளியான அதிர்ச்சித் தகவல் | Real Reason Behind The Negombo Prison Riot   

“நீர்கொழும்பு சிறைச்சாலை போதைப்பொருள் இல்லாத இடமாக மாற்றப்பட்டிருந்தது. இதை முன்னின்று நடத்திய சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.

சிறைக்குள் போதைப்பொருள் வர்த்தகம் செய்தவர்களான சுரேஷ் மற்றும் புருமுனாவின் ஆதாரவாளர்கள், ஐந்தாம் திகதி அதிகாரிகளிடம் காட்டிக்கொடுத்த கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதால் முதல் கலவரம் ஏற்பட்டது.

அடுத்த நாளான 6ஆம் திகதி ஏற்பட்ட கலவரம் முற்றிலும் வேறானது. கலவரத்திற்கு பின்னர் அடுத்த நாள் சிறைச்சாலைக்கு வந்த அதிகாரிகள் கைதிகளை மிரட்டியுள்ளனர்.

நீர் விநியோகத்தை நிறுத்தி, ஒரு மாதத்திற்கு குடும்ப உறவினர்கள் பார்வையிட வர முடியாத வகையில் செய்வதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இவ்வாறு கூறியதால் கைதிகள் மத்தியில் ஆத்திரம் ஏற்பட்டு, அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் T56 சர்ச்சை: வசமாக சிக்கிய நாமலின் புகைப்படம்!

நீர்கொழும்பு சிறையில் T56 சர்ச்சை: வசமாக சிக்கிய நாமலின் புகைப்படம்!

அதிகாரிகள் மீது தாக்குதல்

தாக்குதலையடுத்து கண்ணீர்ப்புகை குண்டு அல்லது ரப்பர் தோட்டாக்கள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக துப்பாக்கி தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு அனுமதி வழங்கியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை தேவை. இது சிறைச்சாலை அதிகாரிகளின் அலட்சியத்தால் நேர்ந்த சம்பவமாகும்” என கீர்த்தி ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையை உலுக்கிய சிறைச்சாலை வன்முறையின் பின்னணியில் பொலிஸார்! வெளியான அதிர்ச்சித் தகவல் | Real Reason Behind The Negombo Prison Riot

இந்த வன்முறை சம்பவத்தில் எட்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

கைதிகளின் ஆக்ரோஷமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும், அதனை மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முதல் நாள் வன்முறை சம்பவத்தை அடுத்து ஆபத்தான கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்றியிருந்தால் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டிருக்காது என்றும், சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பற்ற செயற்பாடே இதற்கு காரணம் என்றும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தொடர் சர்ச்சையில் நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்.. அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்

தொடர் சர்ச்சையில் நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம்.. அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவல்

you may like this video


நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US