நீர்கொழும்பு சிறையில் T56 சர்ச்சை: வசமாக சிக்கிய நாமலின் புகைப்படம்!
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் நீதி அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார ஆகியோருக்குமிடையில் இடம்பெற்ற உரையாடல்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கின்றன.
இந்த சமயத்தில் குறித்த மோதலுக்கு பிரதான காரணமாக அமைவோர் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்களுமாகும் என பல வட்டாரங்களில் இருந்தும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் இந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் இதனை ஒரு வன்முறையாக மாற்றியுள்ளனரென்றும் கூறப்படுகின்றது.
அத்துடன் விசேட அதிரடிப்படையினர் சட்டவிரோதமாக அழைக்கப்படவில்லை என்றும் சிறைச்சாலைகளில் அசம்பாவிதமான ஒரு செயல் இடம்பெறுகின்ற பொழுதுதான் அவர்கள் வரவழைப்படுவதாக சட்ட ஏற்பாடுளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே இந்த அசம்பாவிதமான சம்பவத்திற்கு உரிய நடவடிக்கைகளை நாங்கள் மிக விரைவில் எடுப்போம் என ஹர்ஷன நானயாக்கார குறிபிட்டுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்துடன் இன்னும் சில அதிகாரிகளுக்கு தொடர்பிருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதற்கான விசாரணைகளை பல்வேறுபட்ட கோணங்களிலும் ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்னும் விரிவான தகவல்களை செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியின் ஊடாக பார்ப்போம்..
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri