ஜனாதிபதியை பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்க தயார்:வாசுதேவ நாணயக்கார
முழு நாடும் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனால், ஜனாதிபதிக்கு தற்போது மக்களின் ஆதரவு இல்லை. இந்த நிலையில், சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றின் கீழ் நாட்டில் காணப்படும் உக்கிரமான நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வந்து, தேர்தலை நடத்த வேண்டும்.
ஜனாதிபதியை பரிதாபகரமான நிலைமைக்குள் தள்ள எதிர்பார்க்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்புடன் அமெரிக்காவுக்கு செல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கவும் தயார். ஜனாதிபதியை பரிதாபகரமான நிலைமைக்குள் தள்ள எதிர்பார்க்கவில்லை.
ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கு வழங்க வேண்டிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
பாரிஸ் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க மறுத்த ட்ரம்ப் - கிரீன்லாந்து விவகாரம் மீதான சர்ச்சை தீவிரம் News Lankasri
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri