நாட்டை சீரழித்துவிட்டார் கோட்டாபய ராஜபக்ச: மைத்திரி கடும் விசனம்
"பொய் கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று நாட்டைச் சீரழித்துவிட்டார்" என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,"தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை என அறிவிப்பு விடுத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது அந்த உறுதிமொழியை மீறிவிட்டார்.
எனது ஆட்சியின்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது எனச் சுட்டிக்காட்டினர். தாங்கள் ஆட்சிப்பீடமேறினால் தேசிய பாதுகாப்புக்கே முன்னுரிமை எனவும் அறிவிப்பு விடுத்தனர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது?
சர்வகட்சி அரசு
தற்போதைய அரசு சர்வகட்சி அரசு கிடையாது. அதன் மூலம் சர்வதேச ஆதரவைப் பெற முடியாது" என கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
