நான் விவாதத்திற்கு தயார்: சாணக்கியன் பதிலடி
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், நான் விவாதத்துக்குத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் விடுத்திருந்த அழைப்புக்குப் பதிலளிக்கும் வகையில் தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில்,
கண்டால் வர சொல்லுங்கள், அவரை கையோடு விவாதத்திற்குக் கூட்டி வாருங்கள். நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், நான் விவாதத்துக்குத் தயார்.
இவ்விவாதம் நேரலையில் ஒளிபரப்பப்படவேண்டும். நான் நாடாளுமன்றத்தில் கூறிய கருத்தில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. அது எமது மாகாண தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகவே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி
சாணக்கியனை பகிரங்க விவாதம் ஒன்றிற்கு அழைக்கும் நசீர் அஹமட்