இந்திய அணியின் சகல துறை வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு உபாதை
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணியின் சகல துறை வீரர் ரவீந்திர ஜடேஜா உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட அவரது பரிசோதனை முடிவுகள் மும்பையிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான இறுதி முடிவுக்காக காத்திருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உபாதையின் தன்மை குறித்த மதிப்பீடு
இதன்படி தொடையில் ஏற்பட்டுள்ள உபாதையின் தன்மை குறித்த மதிப்பீடு இன்று மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மாலைக்குள் தொழில்முறை மருத்துவ ஆலோசனை எதிர்பார்க்கப்படுவதாக பிசிசிஐ கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
