இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் ரவிகரன் எம்.பி

Anura Kumara Dissanayaka President of Sri lanka Thurairajah Raviharan
By Shan Mar 19, 2026 10:35 AM GMT
Report

முல்லைத்தீவு - கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 14.01.2026 அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது.

கேப்பாபிலவு காணி விடுவிப்பு

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு - கேப்பாபிலவில் தமிழ் மக்களுக்குரிய காணிகள் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளுக்கு பதிலீட்டுக் காணிகள் வழங்கப்பட்டதுடன், அந்த மக்களுக்கு வீடுகளும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ அதிகாரிகளால் ஜனாதிபதியிடம் பொய்யான தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய கிழக்கில் தீவிரம் அடையும் போர்! இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள நற்செய்தி

மத்திய கிழக்கில் தீவிரம் அடையும் போர்! இலங்கைக்கு கட்டார் வழங்கியுள்ள நற்செய்தி

இந்நிலையில் குறித்த கூட்டத்தில் இவ்வாறு இராணுவத்தினரால் வழங்கப்பட்ட பொய்யான தகவலுக்கு உடனடியாக எதிர்ப்புத்தெரிவித்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாபிலவில் 55 பேருக்குரிய 59.5 ஏக்கர் காணிகளும் 4 பேருக்குரிய 100 ஏக்கர் மத்தியவகுப்புக்காணிகளுமாக மொத்தம் 59 பேருக்குரிய 159.5 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் கேப்பாப்புலவில் விடுவிக்கப்பட வேண்டியுள்ளதாக ஜனாதிபதியிடம் உண்மை நிலையினை சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் கேப்பாபிலவு காணிவிடுவிப்பு விடயம்தொடர்பாக அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவால் இதன்போது இராணுவத்தினரிடம் கோரப்பட்டிருந்தது. இத்தகையசூழலில் கேப்பாபிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள 159.5 ஏக்கர் மக்களின் காணிகள் தொடர்பான உண்மையான விபரங்களை தாமும் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதற்கமைய கடந்த 12.01.2026அன்று முல்லைத்தீவு மாவட்ட மாவட்டசெயலாளர் அ.உமாமகேஸ்வரனை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளின் விபரங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள்தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை தம்மிடம் கையளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்தார்.

அதற்கமைய 12.01.2026ஆம் திகதியிடப்பட்ட DSM/LAN/KEP/MPP/2025/21ஆம் இலக்க கடிதத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரால் கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள்தொடர்பான அதிகாரபூர்வ தரவுகள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டிருந்தது.

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நோக்கி படையெடுக்கும் வாகன உரிமையாளர்கள்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நோக்கி படையெடுக்கும் வாகன உரிமையாளர்கள்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடமிருந்து பெறப்பட்ட கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகள்தொடர்பான அதிகாரபூர்வ தரவுகளை கடந்த 14.01.2026அன்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு கடிதத்துடன் இணைத்து அனுப்பிவைத்த நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள கேப்பாபிலவு மக்களின் பூர்வீக வாழ்விடத்தை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கெள்ளுமாறும் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 18.01.2026அன்று கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, கேப்பாபிலவு மக்களின் காணிவிடுவிப்புத் தொடர்பான கோரிக்கைக்கடிதத்துடன் நாடாளுன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தவகையில் பதினாறு ஆண்டுகளாகத் தமது சொந்த நிலத்தில் குடியேறக் காத்துக் கொண்டிருக்கும் கேப்பாபிலவு மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் பாதுகாப்பாகவும், மரியாதையுடனும் குடியிருக்கச்செய்வதற்கு தேவையான உத்தரவுகளையும், உரிய நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளுமாறு குறித்த ஜனாதிபதிக்கான கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினரால் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி செயலகம் கடிதம்

இந்நிலையில் கடந்த 14.01.2026அன்று நாடாளுமன்ற உறுபினர் ரவிகரன் கேப்பாபிலவு காணிவிடுவிப்புத் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டி ஜனாதிபதி செயலகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளது.

ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்

ஈரானிய க்ரூஸ் ஏவுகணைகள்..! திணறும் அமெரிக்காவின் கைகளில் ஆபத்தான 2270 KG குண்டுகள்

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்திலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள PS/DA/SAD/06/41-Vol.01ஆம் இலக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்குறித்த விடயம் தொடர்பாக வன்னி தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட 2026.01.14 திகதிய கடிதம் தொடர்பானது. 

அந்த கடிதத்தின் மூலம், முல்லைத்தீவு கேப்பாபிலவு பிரதேசத்தில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பெருமளவிலான காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களால் மாதாந்தம் இந்த அலுவலகத்திற்கு அனுப்பப்படும் காணி விடுவிப்பு பற்றிய முன்னேற்றம் தொடர்பான ஆவணத்தை ஆய்வு செய்தபோது, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள காணிகள் தொடர்பான தகவல்கள் குறிப்பிடப்பட்டிருப்பது அவதானிக்கப்படுகின்றது. அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு உடனடியாக அனுப்பி வைக்குமாறு தயவுடன் அறியத்தருகின்றேன் - எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

GalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US