வடக்கு மாகாண சுற்றுலா துறை தொடர்பில் ரவிகரன் எம்.பியின் கோரிக்கை
வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை வினைத்திறனாக இயங்கச்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம்(08.05.2025) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களும், மாவட்டங்களிலுள்ள ஒவ்வொரு பிரதேசசெயலகப் பகுதிகளும் தனித்துவமான இயற்கை மற்றும், கலாசார வளங்களை கொண்டுள்ளன.
சுற்றுலா அலகுகள்
மேலும், மரபுரிமை மையங்கள், பாரம்பரிய உணவுகள், உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றை சந்தைப்படுத்துவதற்கு சுற்றுலாத்துறைக்கு பலமான நிர்வாக அலுவலகமும் ஆளணியும் தேவை.
இதற்கென புதிய அலுவலர்கள் உள்வாங்கப்பட வேண்டும். அவ்வாறு உள்வாங்கப்படும் புதிய அலுவலர்களின் திறமைகளையும், ஆற்றல்களையும் பயன்படுத்தக்கூடிய வகையில் எமது மாகாணத்திலுள்ள மாவட்டச் செயலகங்களில் சுற்றுலா அலகுகளை உடனடியாக நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மணிவிழாவிற்கு மாலையுடன் உட்கார்ந்த குணசேகரனுக்கு விழுந்த பெரிய இடி.. கெத்து காட்டிய ஜனனி, எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
