முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தல்

Mullaitivu Sri Lanka Fisherman Ramalingam Chandrasekar Thurairajah Raviharan
By Shan Jul 10, 2026 08:08 AM GMT
Report

தற்போது முல்லைத்தீவுக் கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படை மற்றும் துறைசார்ந்த உரிய அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் உடனடியாக உத்தரவிட்டுள்ளனர்.

நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சிற்குரிய அலுவலகத்தில் நேற்று (09.07.2026) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்! ஜனாதிபதியின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம்

நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்! ஜனாதிபதியின் புதிய சமூகப் பாதுகாப்புத் திட்டம்

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள்

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு நாமும் தொடர்ச்சியாக நாடாளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சரிடமும், உரிய துறைசார்ந்த தரப்பினரிடமும் வலியுறுத்தி வருகின்றோம்.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மை நாட்களாக வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமெட் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள இளம் குடும்பஸ்தர்

யாழில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ள இளம் குடும்பஸ்தர்

அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதாரங்களாக தம்மால் சமர்ப்பிக்க முடியுமெனவும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் உடனடியாக நாடாளுமன்றில் கடற்றொழில் அமைச்சருக்குரிய அலுவலகத்திற்குச் சென்று கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செய்றபாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறியிருந்தேன்.

சிறு தொழிலாளர்களுக்கு பாதிப்பு

குறிப்பாக சிறுதொழிலாளர்கள் படும் துன்பங்களையும், வேதனைகளையும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரது கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன். இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்திருப்பதால், சிறு தொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலை காணப்படுவதை அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன். 

முல்லைத்தீவில் இடம்பெறும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்தல் | Raviharan Mp Statement  

சட்டவிரோதிகள் மாத்திரம்தான் கடற்றொழில் செய்யமுடியுமா எனவும் இதன்போது அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன். அத்தோடு கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கோள்ளும்போது சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்பவர்கள் மீது நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை எனவும், மாறாக சட்டமுறைகளுக்கு உட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிறுதொழிலாளர்ககளிடம் அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றதா என பலதரப்பட்ட விசாரணைகளை மேற்கொள்வதாக கடற்றொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

அதனை நான் கடற்றொழில் அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருந்தேன். அதேவேளை இத்தகைய சட்டவிரோத கடற்றொழிலாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துமாறு தாமும் தொடர்ந்து கூறிவருவதாகவும், அவ்வாறான சட்டவிரோத சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தம்மால் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இதன்போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டடிருந்தது.

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்

மகிந்த குடும்பத்திற்கு தொடரும் சிக்கல் - யோசிதவை காட்டிக்கொடுத்த முன்னாள் காதலி - பல தகவல்கள் அம்பலம்

 

அத்தோடு இவ்வாறாக முல்லைத்தீவு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படையினருக்கும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கும் எனக்கு முன்பாகவே கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதை உறுதிப்படுத்தும்வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை 10.07.2026 கடற்றொழில் அமைச்சரிடமும், பிரதி அமைச்சரிடமும் சமர்ப்பிப்பதாகக் கூறிவிட்டு வந்திருக்கின்றேன். அந்தவகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கெதிராக விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US