சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான ரவி கருணநாயக்க
சற்றுமுன்னர் நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை (31) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார்.
ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிப்பு
மூன்று சந்தர்ப்பங்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அங்கு முன்னிலையாகவில்லை.

இதனையடுத்து அவரிடம் வாக்குமூலம் பெற அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை அவரது வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அவர் இருக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
தனது மகளின் திருமண ஏற்பாடுகள் காரணமாக ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வேறொரு திகதியை வழங்குமாறு ரவி கருணாநாயக்க தனது சட்டத்தரணிகள் ஊடாகக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் பின்னர் ரவி கருணாநாயக்க எதிர்வரும் தினமொன்றில் கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.