20க்கு 20 கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்திய வம்சாவளி வீரரின் அரிய சாதனை
ஹொங்காங் (Hong Kong) அணியைச் சேர்ந்த இந்திய வம்சாவளி வீரர் ஆயுஸ் சுக்லா, சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் போட்டியில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
அவர் ஒரே போட்டியில் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டின் ஓவர்களாக வீசி ஆசிய அளவிலும், உலக அளவிலும் சாதனை படைத்துள்ளார்.
21 வயதான ஆயுஸ் சுக்லா மங்கோலியா அணிக்கு எதிரான 20க்கு20 உலகக்கிண்ண ஆசிய தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
மூன்றாவது பந்துவீச்சாளர்
சுக்லா, முதல் ஓவரில் இருந்து தனது 4 ஓவர்களை ஒரேயடியாக ஓட்டமற்ற ஓவர்களாக வீசி முடித்ததுடன், இந்த நான்கு ஓவர்களில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆசிய அளவில் இந்த சாதனையை செய்த முதல் பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
மேலும், உலக அளவில் இந்த சாதனையை செய்யும் மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக கனடா அணியின் சாத் பின் ஜபார் மற்றும் நியூசிலாந்து அணியின் லக்கி பெர்குசன் ஆகியோர் 20க்கு 20 போட்டியில் தாங்கள் வீசிய நான்கு ஓவர்களையும் மெய்டனாக வீசி சாதனை படைத்ததுள்ளனர்
அவர்கள் வரிசையில் சுக்லா மூன்றாவதாக வீரராக இணைந்துள்ளார்.
ஆயுஸ் சுக்லா மகாராஸ்டிரா மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள போல்சா என்ற ஊரில் பிறந்தார்.
சுக்லா,ஹொங்காங் அணிக்காக இதுவரை 34 போட்டிகளில் பங்கேற்று 29 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
இதற்கு முன் கம்போடியா அணிக்கு எதிராக மூன்று ஓவர்களில் மூன்று ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தார்.
குறைந்த ஓட்ட எண்ணிக்கை
2022 ஆசியக்கிண்ணப் போட்டியில் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
இதேவேளை சுக்லா சாதனை படைத்த இந்தப் போட்டியில் மங்கோலியா அணி வெறும் 17 ஓட்டங்களை மட்டுமே பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சர்வதேச 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளிலேயே இது மூன்றாவது மிக குறைந்த ஓட்ட எண்ணிக்கையாகும்.
இதற்கு முன் ஐஸல் ஒஃப் மேன்(The Isle of Man)என்ற அணி 10 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது.
அத்துடன் மங்கோலியா அணி 2024 மே மாதம் ஜப்பானுக்கு எதிரான 12 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |