வடக்கின் நீலங்களின் சமரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முன்னிலையில்!
வடக்கின் நீலங்களின் சமர் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மற்றும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணிகள் மோதும் 13ஆவது கிரிக்கெட் தொடரில் கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 27 ஓட்டங்களால் முன்னிலைப்பெற்றுள்ளது.
குறித்த தொடரில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி தனது முதல் இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி மத்திய கல்லூரி அணி 37.4 ஓவர் நிறைவில் 168 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
முதல் இனிங்ஸ்
மத்திய கல்லூரி அணி சார்பாக மதுஷன் 38ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார் .பந்து வீச்சில் இந்துக்கல்லூரி அணி சார்பாக கிருசாந்தன், கரிசாந்தன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.
பதிலுக்கு முதலாவது இனிங்சை ஆரம்பித்த கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணி 47.4 ஓவர் நிறைவில் 141 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்திருந்தனர்.
அணி சார்பாக தமிழவன் 46ஓட்டங்களையும், கரிசாந்தன் 45ஓட்டங்களையும் அதிகபட்சமா பெற்றுக்கொடுத்தனர்.
08விக்கெட்டுகள்
பந்து வீச்சில் கெளசிகன் 08விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.
இதுவரை நடந்த 12போட்டிகளில் 4போட்டிகளில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி அணியும் 3போட்டிகளில் மத்திய கல்லூரி அணியும் வெற்றி பெற்றுள்ளன. மேலும், ஐந்து போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
