கடினமான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் நிறைவின்போது இலங்கை அணி சவாலான ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தது.
இதன்படி இரண்டு நாட்கள் மீதமிருக்கையில் இலங்கை அணி இன்னும் 430 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் உள்ளது.
இரண்டு விக்கெட் இழப்பு
எனினும் தற்போது முதல் இரண்டு விக்கெட்டுக்களை அந்த அணி இழந்துள்ளது. இதன்படி மூன்றாம் நாள் முடிவின்போது இலங்கை அணி, தமது இரண்டாம் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்களை பெற்றிருந்தது.
முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 196 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

எனினும் இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் 427 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 251 ஓட்டங்களையும் பெற்றது.
இங்கிலாந்தின் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்(143) மற்றும் கஸ் அட்கின்ஸன் (118) சதங்களை பெற்றுக்கொடுத்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் மேலும் ஒரு சதத்தை(103) பெற்றார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri