கோவிட் வைரஸிற்கு எதிராக சீனா கண்டுபிடித்த புதிய மருந்து
உலகமே கோவிட் பிடியில் திணறியுள்ள நிலையில் முதல் முறையாக மூச்சு வழியே உள்ளிழுக்கும் கோவிட் மருந்தை அறிமுகம் செய்து சீனா சாதனை படைத்துள்ளது.
சீனா இராணுவத்தின் தொற்று நோய் நிபுணர் சென் வேய் மற்றும் CanSino Biologics மருந்து உற்பத்தி நிறுவனம் இணைந்து மருந்தினை தயாரித்துள்ளனர். இந்த மருந்து ஹாய்னன் மாகாணத்தில் நடந்த சர்வதேச சுகாதாரத்துறை கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்தின் சோதனை சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதத்தில் தொடங்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட சோதனையில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் Sinopharm மற்றும் Sinovac ஆகிய கோவிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இலங்கையில் அதிகளவானோக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam