அதிக கடனில் சிக்கியுள்ள நாடுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்
அதிக கடனில் சிக்கியுள்ள நாடுகளுக்கான விரைவான கடன் மறுசீரமைப்பு விடயங்களில் முன்னேற்றத்தை அடைய முடியும் என்று தாம் எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள, உலக இறையாண்மை கடன் வட்டமேசை கூட்டத்தொடரின் போது இதனை தாம் எதிர்பார்ப்பதாக நிதியம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர், ஜூலி கோசாக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
20 முக்கிய பொருளாதாரங்களின் நாடுகள்
20 முக்கிய பொருளாதாரங்களின் நாடுகள் குழுவின் இணையவழி சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து 20 முக்கிய பொருளாதார நாடுகளின் தற்போதைய தலைவரான இந்தியாவினால், பிரான்சின் தலைநகர் பெரிஸில், ஜூன் 15 பயிலரங்கு நடத்தப்படும் என்பதை பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
இதில் அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர்கள், பெரிஸ் கிளப், சர்வதேச நிதி நிறுவனம் ஆகியவற்றுடன் சில வேளைகளில் சீனாவும் பங்கேற்கும்.
இதேவேளை ஜூன் 30 அன்று வட்டமேசை பங்கேற்பாளர்களின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
