பொலிஸார் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது: சஜித் அணி காட்டம்
"நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய புலனாய்வாளர்களும் சட்டம் – ஒழுங்கைக் காக்க வேண்டிய பொலிஸாரும் தங்கள் அதிகார வரம்பை மீறிச் செயற்படுவது கண்டனத்துக்குரியது என நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான கெடுபிடிகள் தொடர்பில் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. ஊடகங்களிடம் கருத்துதெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
"வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளினதும் அவர்களின் ஆதரவாளர்களினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும்.
ஆயுதமுனையில் அச்சுறுத்தல்
மக்களின் தோழனாக இருக்க வேண்டிய பொலிஸார் மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் ஆயுதமுனையில் அச்சுறுத்துவது இந்த நாட்டின் ஜனநாயகத்தை கேள்விக்குட்படுத்துகின்றது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் அரசு சாக்குப் போக்குக் காரணங்களைக் கூறாமல் உண்மை நிலைவரங்கள் தொடர்பில் ஆராய வேண்டும். குற்றவாளிகள் யாராக இருப்பினும் தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
