கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சரீர பிணையில் விடுதலை (Photos)
புதிய இணைப்பு
சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது ஆதரவாளர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர், சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நான்காம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திலிருந்து நீதிமன்றத்திற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மூன்றாம் இணைப்பு
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
மருதங்கேணி பகுதியில் பரீட்சை ஒழுங்குபடுத்தல் மண்டப வளாகத்தில் கடமையிலிருந்த பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலம் பதிவு செய்ய அவர் அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் இணைப்பு
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தால் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டது.
பொலிஸ் நிலையத்தில் அவர் முன்னிலையானால் வெளிநாட்டு பயணத் தடை நீக்கப்படும் என்றும் மன்று சுட்டிக்காட்டி இந்தக் கட்டளையை நேற்று வழங்கியது.
இதேவேளை, இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்
Last night at 8.30pm the police served me with the translation of the written request that I produce myself to the Maruthenkerni police on the 8th June to record a statement. (5) pic.twitter.com/NCDyWkSsW3
— Gajen Ponnambalam MP (@GGPonnambalam) June 7, 2023
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைக் கைது செய்வதற்காக பொலிஸார் இன்று காலை கொழும்பிலுள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸார் காலை 6.30 அளவில் தமது இல்லத்திற்கு வந்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும், இது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பொலிஸார் கைது செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெளியான தகவல்
கொழும்பில் வைத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் நேற்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டிருந்தது.
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |









Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
