ரஞ்சன் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் - விஜயதாச ராஜபக்ச
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் அடுத்த வாரம் விடுதலை செய்யப்படுவார் என நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளர்.
விடுதலைக்கான பரிந்துரை அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
ரஞ்சன் ராமநாயக்க சம்பந்தமான சகல பரிந்துரை அறிக்கைகளும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
அதேவேளை தவறு சம்பந்தமாக மன்னிப்பு கோரும் ஆவணங்களிலும் ரஞ்சன் ராமநாயக்க அண்மையில் கையெழுத்திட்டார்.
அரைவாசி தண்டனை காலத்தை அனுபவித்துள்ள ரஞ்சன்
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கில் உயர் நீதிமன்றம் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கியது. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றம் அவருக்கு தண்டனையை வழங்கியது.
இதனடிப்படையில் ரஞ்சன் ராமநாயக்க சுமார் இரண்டு ஆண்டு காலம் தண்டனையை அனுபவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள்,கலைஞர்கள் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தனர்.





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
