நீதிமன்ற அவமதிப்புக்கு மன்னிப்பு கேட்பதா..!: ரஞ்சனின் சட்ட ஆலோசகர் வெளியிட்ட தகவல்
நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்புக் கோருவது குறித்து தீர்மானிப்பதற்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடி வருவதாக அவரது சட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ரஞ்சன் ராமநாயக்க இரண்டு நாட்களில் இறுதி முடிவை எடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துமூலம் மன்னிப்பு

நீதிமன்றத்தை அவமதித்ததற்காக, நீதித்துறையிடம் எழுத்துமூலம் மன்னிப்பு கோரினால் ராமநாயக்க விடுதலை செய்யப்படுவார் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச நேற்று புதன்கிழமை தெரிவித்தார்.
இதற்கு அமைய இந்த வாரயிறுதியில் மன்னிப்புக் கேட்டால், அடுத்த வாரம் ராமநாயக்க மன்னிக்கப்பட்டு விடுவிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
| ரஞ்சன் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டுமென விஜயதாச ராஜபக்ச கோரிக்கை |
குணசேகரனிடம் எகிறி பேசிய சக்தி, திடீரென நடந்த துப்பாக்கி சூடு... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri