ரஞ்சன் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டுமென விஜயதாச ராஜபக்ச கோரிக்கை
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, பொது மன்னிப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுதலை செய்ய வேண்டும் என அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகளின் கருத்து
மேலும் தெரிவிக்கையில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக, சத்திய கடதாசியின் மூலம் மன்னிப்பு கோரும் பட்சத்தில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

சிறைத்தண்டனையின் போது ரஞ்சன் ராமநாயக்கவின் நன்னடத்தை தொடர்பில் அவர் திருப்தி வெளியிட்டிருந்தார்.
சட்டமா அதிபரிடம் ஆலோசனை
இவ்விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமும் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கணிசமான வருடங்கள் சிறைத்தண்டனையில் இருப்பதால், அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது தொடர்பில் பரிசீலிக்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
| ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் - நீதி அமைச்சர் நம்பிக்கை |
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
திருமணம் முடிந்த சில நிமிடங்களில் மரணம்: 5 ஆண்டுகளாக காதலித்த நபருக்கு..நேர்ந்த துயரம் News Lankasri