நாசா விண்வெளி நிலையத்தில் ரோஹித ராஜபக்ச தயாரித்த விண்கலத்தை தேடும் ரஞ்சன் (video)
அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சுற்றுப்பயணமொன்றினை மேற்கொண்டுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இந்த பயணத்தின் போது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கியதாக கூறப்பட்ட விண்கலம் தொடர்பிலும் தகவல் வெளியிட்டுள்ளார்.
சிச்சியின் விண்கலத்தினை காணவில்லை
இதன்போது இலங்கை மக்களின் வரி பணத்தில் (ரோஹித ராஜபக்ச) சிச்சியின் உருவாக்கத்தில் இலங்கையின் தேசிய கொடியுடன் வான் நோக்கி அனுப்பப்பட்ட விண்கலத்தினை காணவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், விண்கலம் தொடர்பில் அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்க நடித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் சிங்கள திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட உள்ளமையினால் நிகழ்வொன்றில் கலந்துக்கொள்வதற்காக கடந்த மாதம் அவர் அமெரிக்கா சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.













ரஷ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் பார்க்கும் இந்தியா! அமெரிக்கா விடுத்த அடுத்த எச்சரிக்கை News Lankasri
