இலங்கை - இந்தியாவிற்கும் இடையிலான உறவை வலுப்படுத்த ரணில் வலியுறுத்து
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் ஆழமாக வேரூன்றிய வரலாற்று மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் இலங்கை - இந்திய சமூகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றின் போதே
அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கலாசார, மத மற்றும் ஜனநாயக இணைப்பு
பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கையொப்பமிட்ட தொலைநோக்கு அறிக்கையை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விக்ரமசிங்க இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால கலாசார, மத மற்றும் ஜனநாயக இணைப்புகளை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளின் அடிக்கடி கவனிக்கப்படாத அம்சங்களை வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை போன்ற துறைமுகங்களின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் தென்னிந்திய இராச்சியங்களுக்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தகத்தை எளிதாக்குவதில் அவை ஆற்றிய பங்கை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி விக்ரமசிங்க வரலாற்றுச் சூழலையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் தென்னிந்தியாவின் நலனுக்காக இலங்கையின் மூலோபாய பிராந்திய இருப்பிடத்தைப் பயன்படுத்துவதற்கு போக்குவரத்து மற்றும் சக்தி ஆகிய இரண்டிலும் இணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் தென்னிந்தியாவின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அதிகப்படியான புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகளை அவர் எடுத்துரைத்துள்ளார்.
மத யாத்திரைகள் மற்றும் சுற்றுலாப் பயணங்களின் உதாரணங்களை மேற்கோள்காட்டி, இரு நாடுகளுக்கும் இடையிலான இருவழிப் பரிமாற்றமாக சுற்றுலாவின் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |