வவுனியா பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய மருத்துவ பீடம்: ரணில் உறுதி
வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு (Mullaitivu) - மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இன்று (26.05.2024) கருத்துரைக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணத்தை அபிவிருத்தி செய்வதே எமது நோக்கம்.
அபிவிருத்தி திட்டங்கள்
இதற்கமைய, கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |