இரகசிய கூட்டத்திற்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட மொட்டு உறுப்பினர்கள்!
கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மூடிய அறைக்குள் மொட்டுக்கட்சியின் இரகசிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட நேர்காணலில் போது கருத்து தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். பி எஸ். பி திஸாநாயக்க(S. B. Dissanayake) இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரகசிய கலந்துரையாடலொன்று கொழும்பில் உள்ள நட்சத்திர விடுதியொன்றில் மூடிய அறைக்குள் இடம்பெற்றதா? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்களுக்கும் அறிவிக்க முடியாது
இதற்கு பதிலளித்த அவர்,
“ ஆம் நடைபெற்றது உண்மை. இதற்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் நான் பங்கேற்கவில்லை.
எதற்காக இந்த சந்திப்பு நடைபெற்றது இதில் யார் யார் பங்கேற்றது என்பது தொடர்பில் எதனையும் கூற முடியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் நடைபெறும் அனைத்தையும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் அறிவிக்க முடியாது.
கட்சியின் தீர்மானத்துக்கமைய ஒரு சில விடயங்கள் மாத்திரமே ஊடகங்களுக்கும் மக்களுக்கும் தெரிவிக்கப்படும்.” என பகிரங்கமாக பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |