ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கை : எதிர்பார்க்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் கருத்து
இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் ஆணையாளர், கடந்த 17 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையை தாம் தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்
குறித்த அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தமது கட்சி அதன் கருத்தை வெளியிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையாளரின் அறிக்கை
அறிக்கையில், முதல் தடவையாக 1971 மற்றும் 1980 களின் பிற்பகுதியில் தேசிய மக்கள் சக்தியின் கிளர்ச்சியின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் விசாரணைகள் கோரப்பட்டுள்ளன.
முன்னதாக இறுதிப்போரின் போது இறந்த தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படும் நினைவேந்தலுக்கு தமது ஆதரவை தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட நிலையிலேயே ஜெனீவா அறிக்கை வெளியாகியுள்ளது.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்தமுறை தேசிய மக்கள் சக்தியின் பங்கு அளப்பரியது என்ற வகையில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை குறித்த அந்தக்கட்சியின் கருத்து எதிர்பார்க்கப்படும் ஒன்றாக அமைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
