மனிதக்கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கையரை நாடு கடத்தும் இங்கிலாந்து
மனிதக்கடத்தலில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்ட இங்கிலாந்தை சேர்ந்த இலங்கையர் ஒருவரை பிரான்ஸுக்கு (France) நாடு கடத்துமாறு இங்கிலாந்தின் (England) நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது
கோழி விற்பனை நிலையம் ஒன்றில் பணிபுரிந்துக்கொண்டிருந்த நபர் மீதே இவ்வாறு மனிதக்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
58 வயதான இந்த இலங்கையர், தமது வாடகை வீட்டில் இருந்து இரகசியமான ஒருங்கிணைப்பு வலையமைப்பை மேற்கொண்டுள்ளார் என நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை
அவர் பல ஐரோப்பிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்படும் மனிதக்கடத்தலில் முக்கியமானவராக செயற்பட்டார் என்று நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
இதனையடுத்து, அவர் நீதிமன்றில் முன்னிலையாகிய நிலையில், அவருக்கு 5 ஆண்டுகளுக்கான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர், 2022ஆம் ஆண்டு பிரான்ஸ் அதிகாரிகளின் கோரிக்கையின் பேரில் இங்கிலாந்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நிராகரிக்கப்பட்ட கோரிக்கை
இந்நிலையில், அவரை, பிரான்ஸுக்கு நாடு கடத்தவேண்டாம் என்று இங்கிலாந்தில் குடியுரிமையைக் கொண்ட அவரின் மனைவி விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
புதிய உத்தரவின்படி அவர் 10ஆயிரம் பவுண்ட்ஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், நாடு கடத்தப்படும் வரை அவர், கண்காணிப்பு குறிச்சொல் அட்டையை அணிந்திருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |