ஜனாதிபதி தேர்தலில் ரணில் ஒரு கோடி வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் : எஸ்.சுதர்சன் தெரிவிப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையைவிட அதிகமாக ஒரு கோடி வாக்குகளை எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) பெறுவார் என ஜக்கிய தேசிய கட்சி மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் தெரிவித்துள்ளார்.
ஜக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மண்முனைபற்று பிரதேச அமைப்பாளர் ஏ.ரி. முகமட் அஸ்மியின் வலயக்காரியாலய திறப்பு விழா நேற்று (20) மாலை பாலமுனையில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் எஸ்.சுதர்சன் காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.
புனரமைப்பு பணிகள்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஜ.தே.கட்சி கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி புனரமைப்பு பணி ஆரம்பிக்கப்பட்டது அதனடிப்படையில் கட்சி செயலாளர் நாடளாவிய ரீதியில் 153 தொகுதிகளில் அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் நடந்து முடிந்தது.
இந்த தொகுதிவாரியான அமைப்பாளர்களுக்கு வலய ரீதியான அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கியதுடன் நாடளாவிய ரீதியில் ஆயிரம் பிரதேச காரியாலயம் திறந்துவைக்கும் திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலமுனை முதலாம் பிரிவில் அஹமட் றிஸ்வி வீதியில் இன்று 5 வது காரியாலயம் திறந்து வைத்துள்ளோம்.

இருந்தபோதும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஜனாதிபதி தேர்தல் இந்த தேர்தலை வெளிநாடுகள் மற்றும் இலங்கை மக்கள் எதிர்பார்கின்றது போல எமது கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே இலங்கையில் ஜனாதிபதி தேர்தலிலே வெற்றியீட்டிய ஜனாதிபதிகள் எடுத்த வாக்குகளின் தொகையைவிட அதிகமாக வாக்குகளை பெறுவார்.

எனவே அவர் வெற்றிபெற உங்களது உறவினர்கள் அயலவர்கள் நண்பர்கள் அனைவரையும் அவருக்கு வாக்களிக்க நீங்கள் அனைவரும் அயராது உழைக்கவேண்டும். அப்போது தான் நாங்கள் எதிர்பாக்கின்ற இலக்கையடைய முடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கிரான்குளம் புதுக்குடியிருப்பு மண்முனைப்பற்று வலய அமைப்பாளர் கி.தவநாதன். மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 17 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam