முற்றிலும் புதிய சின்னத்தில் தேர்தலில் களமிறங்கும் ரணில்: ஆஷு மாரசிங்க சுட்டிக்காட்டு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), யானை அல்லது மொட்டு அல்லாமல் முற்றிலும் புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியிஸ்தருமான ஆஷு மாரசிங்க(Ashu Marasinghe) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க தேசிய வேட்பாளராக பல கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்துவார் என அவர் ஊடகவியலாளர்களிடம் கூறியுள்ளார்.
“ஜனாதிபதித் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவளிப்பதில் அவர் உட்பட பலருக்கு பிரச்சினை இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றவர்கள் கூறியுள்ளனர்.
புதிய சின்னத்தில் போட்டி
அதேபோன்று, அவர் மொட்டுவின் கீழ் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள தமக்கும் பிரச்சினை உள்ளது.
எனவே விக்ரமசிங்க புதிய சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஐக்கிய மக்கள் சக்தியினர் ரணிலுக்கு ஆதரவளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக்கட்சியும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள முன்வைத்துள்ள பிரேரணையை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்
அரசியலமைப்பின்படி ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் இரண்டையும் ஒரே நாளில் நடத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தரையில் தூக்கம், 20 பேருக்கு 4 கழிப்பறை: போராட்டத்தில் உருவான இந்திய மகளிர் கிரிக்கெட் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam
மேக் 5 வேகத்தில் வடிவத்தை மாறும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - சாத்தியமற்றதை சாத்தியமாக்கும் சீனா News Lankasri