இனவாத அடக்குமுறையை கையாளும் பாதுகாப்பு துறை: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

Jaffna Sri Lanka Police Investigation Ceylon Teachers Service Union Northern Province of Sri Lanka
By Parthiban Apr 10, 2024 01:12 AM GMT
Report

வடக்கில் பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மலராக கருதப்படும் காந்தள் (கார்த்திகை பூ) மலரின் வடிவில் இல்லம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளமை குறித்து பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

பொலிஸாரின் நடவடிக்கையினால் பாடசாலை மாணவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தது.

பணத்திற்காக பிரான்ஸ் இளைஞரை ஏமாற்றி தலைமறைவான கிளிநொச்சி யுவதி

பணத்திற்காக பிரான்ஸ் இளைஞரை ஏமாற்றி தலைமறைவான கிளிநொச்சி யுவதி

இல்ல விளையாட்டுப் போட்டி

பாடசாலைப் பாடப்புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ள பூக்களின் வடிவத்தை பயன்படுத்தி மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்த முடியாத வகையில் நெருக்கடியை ஏற்படுத்துவது இனவாதக் கோணத்தில் செயற்பபடுவதையே காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இனவாத அடக்குமுறையை கையாளும் பாதுகாப்பு துறை: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் | School Sporth Meet Issue Sri Lanka

யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் கடந்த மார்ச் 30ஆம் திகதி இடம்பெற்ற நிலையில், அங்கு வந்த இராணுவத்தினரும் பொலிஸாரும் கவச வாகனம் மற்றும் காந்தள் மலர் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருந்த இல்லங்கள் குறித்து மாணவர்களிடம் விசாரணை நடத்தியதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பின்னர் இவ்விடயம் தொடர்பில் விசாரிப்பதற்காக கடந்த மார்ச் 31 ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு குறித்த இல்லங்களின் சில மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொலிஸார் அறிவித்திருந்தனர்.

கடந்த மார்ச் 31ஆம் திகதி தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் மாணவர்களிடம், அந்த மாதிரிகளை வைத்து இல்லங்களை அமைக்குமாறு ஆசிரியர்களால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதா என பொலிஸார் வினவியுள்ளனர், எனினும் மாணவர்கள், தாம் அன்றாடம் காண்கின்ற விடயங்களையும், தமது பாடப் புத்தகங்களில் பார்த்த விடயங்களையும் வைத்தே இல்லங்களை உருவாக்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்கள் கூறுகையில், தாங்கள் உருவாக்கும் இல்லங்களில் அலங்காரங்கள் குறித்து ஆசிரியர்களுக்கு முன் கூட்டியே அறிவிக்கவில்லை எனவும், வருடத்திற்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும் காந்தள் மலரை ஏனையவர்களும் பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நோக்கில் இவ்வாறு இல்லத்தை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அத்தியாவசிய உணவுப்பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இனவாத அடக்குமுறை

கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி பாடசாலையின்அதிபரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்ததாகவும் தெல்லிப்பளை பொலிஸார் அவரிடம் மாணவர்கள் உருவாக்கிய மாதிரிகள் தொடர்பில் வினவியதாகவும் பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஆசிரியர் சங்கம் செய்த முறைப்பாடு தொடர்பில் விசாரிப்பதற்காக, ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு, தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாக மனித உரிமைகள் இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவிக்கின்றார்.

அன்றைய தினம், தெல்லிப்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வரவில்லை எனவும், அவர் சார்பில் பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் வந்ததாகவும், பொறுப்பதிகாரி விடுமுறையில் இருந்ததால் தான் முன்னிலையானதாக அந்த அதிகாரி கூறியதாகவும் ரி.கனகராஜ் பிரதேச ஊடகவியலாளர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனவாத அடக்குமுறையை கையாளும் பாதுகாப்பு துறை: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் | School Sporth Meet Issue Sri Lanka

தெல்லிப்பளை பொலிஸ் நிலைய உயர் அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பிரகாரம் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர் ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்ததாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவம் வடக்கில் நடைபெற்று வரும் இனவாத அடக்குமுறையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீஷன் ஏப்ரல் 2ஆம் திகதி ஊடகங்களுக்கு வலியுறுத்தியிருந்தார்.

“அரசியலமைப்புக்கு எதிரான விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அல்லது தடைசெய்யப்பட்ட விடயங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டாலோ அதனை சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து விசாரணைகளை மேற்கொள்வது வேறு விடயம்.

எந்த வகையிலும் அரசியல் சாசனத்தில் தடை செய்யப்படாத, அதுபோல் எமது பாடப்புத்தகங்களில் காணப்படுகின்ற காந்தள் மலர் தொடர்பில் மாணவர்கள் தமது திறமையை வெளிப்படுத்த முடியாதளவுக்க நெருக்கடியும் அடக்குமுறையும் இங்கு நடக்கிறதென்றால், இது முழுமையாக இனவாத கோணத்திலேயே இடம்பெறுகிறது. எங்களால் இதனை அனுமதிக்க முடியாது.” என அவர் மேலும் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மீது அதிரடி நடவடிக்கை

மட்டக்களப்பு - பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் மீது அதிரடி நடவடிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, சின்னப்புதுக்குளம், இறம்பைக்குளம்

14 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US