பொது வேட்பாளராகவே களமிறங்குவார் ரணில் : ரவி மீண்டும் வலியுறுத்து
சிறுபான்மையினக் கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத பொது வேட்பாளராகவே ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:- "தேர்தலுக்கு நேர்மையாக முகங்கொடுக்க அஞ்சி, மக்களை ஏமாற்றி வாக்கு வேட்டை நடத்துவதற்காக சிலர் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி வருகின்றனர்.
மக்களின் நம்பிக்கை
செய்ய முடியாத விடயங்களைக்கூட உறுதிமொழியாக வழங்கி வருகின்றனர். இதனால் அரசியல் கட்சிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல்போயுள்ளது. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி செய்யக்கூடிய விடயங்களையே கூறி வருகின்றது.

கசப்பாக இருந்தாலும் உண்மையைக் கூறுவது மேலானதாகும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் மட்டும் அல்ல அனைத்து கட்சிகளுடனும் எமக்குத் தொடர்பு உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனைவரையும் இணைத்துக்கொண்டு கட்சி சாராத வேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறங்குவார் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சோழனை நம்பாமல் சேரன், பாண்டி செய்த காரியம், ஆனால் நிலா... அட்டகாசமான அய்யனார் துணை சீரியல் Cineulagam
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam