ரணிலின் கடிதத்தை அநுர எப்படி அறிந்தார்..
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremesinghe) லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன் அழைப்பது இரகசியமல்ல என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுடனான, அவரின் கடிதப் போக்குவரத்து தொடர்பில், ரணிலின் சமூக ஊடகப் பதிவை மட்டுமே, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கோள் காட்டினார் என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஏதும் இரகசியம் இல்லை
லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுடனான தனது கடிதப் போக்குவரத்து குறித்து ஜனாதிபதி திசாநாயக்க எவ்வாறு அறிந்தார் என்ற ரணில் விக்ரமசிங்கவின் கேள்விக்கு பதிலளித்தபோதே, அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
2025, ஏப்ரல் 11 ஆம் திகதியன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னால் முன்னிலையாக முடியாது என்றும் ஏப்ரல் 17ஆம் திகதி தமக்கு புதிய திகதி வழங்கப்பட்டதாகவும், ரணில் விக்ரமசிங்க, ஏப்ரல் 11 ஆம் திகதியன்று, தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்திருந்தார்.
இதனை கோடிட்டே, ஜனாதிபதி அநுரகுமார தமது கருத்தை வெளியிட்டதாக அமைச்சர் ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே அதில் ஏதும் இரகசியம் இல்லையென்று ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு ஏப்ரல் 11 ஆம் திகதியில் அழைத்தமை அனைவருக்கும் தெரிந்த உண்மை.
ரணிலின் சமூக ஊடகப் பதிவுகள் மூலமே, ஜனாதிபதி அதைப் பற்றி அறிந்து கொண்டார். லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, அதனை ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அறிவிக்கவில்லை என்றும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
