அநுரவின் இரகசிய ஆலோசகராக சுமந்திரன்
தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவுக்கு ஆலோசகராக செயற்பட்டதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தேர்தல் காலம் என்பதால் பெரும்பான்மை கட்சிகளுக்கு எதிராக சுமந்திரன் கருத்து தெரிவிப்பதாக சுகாஷ் கூறியுள்ளார்.
தேர்தல் முடிந்த பின்னர் இலங்கையின் ஆட்சியாளருக்கு அரசியல் மற்றும் சட்ட ஆலோசனைகளை சுமந்திரன் வழங்குவார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், தான் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அக்கட்சியை விட்டு வெளியேறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவை தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
