ரணில் வழங்கிய 10 பக்க வாக்குமூலம்..
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிக நீண்ட வாக்குமூலத்தினை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 10 பக்கங்களுக்கான வாக்குமூலத்தினை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது வழங்கியுள்ளார். இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் 3 மணி நேர வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம்
ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க முதலமைச்சராக இருந்த போது நடந்த மோசடி சம்பவம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
இந்த மோசடி தொடர்பில் ஏற்கனவே சாமர சம்பத் தசநாயக்க கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட அறிக்கைக்கமைய அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.