ஊழல் விசாரணையின் பின்னர் ரணில் வெளியிட்ட விசேட தகவல்
அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது ஒரு குற்றமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிலிருந்து வெளியேறியவுடன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“அரசாங்கத்தின் வைப்புத்தொகையில் இருந்து பணம் எடுத்து அதனை முதலீட்டு மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகளில் இடும் போதே பொருளாதாரம் வளர்ச்சியடையும்.
பின்பற்ற வேண்டிய செயன்முறை
மாறாக, நாம் பணத்தை மீண்டும் வைப்புத்தொகையிலேயே இட்டால் பொருளாதரம் வளர்ச்சியடையாது. பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்த செயன்முறையையே பின்பற்ற வேண்டும்.
அரசாங்கத்தை நடத்துவதற்காகவே வைப்புத்தொகை உள்ளது. அரசாங்கத்தை நடத்துவதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |