கடந்த கால அவலங்களின் சூத்திரதாரி ரணில்! அதிர்ச்சித் தகவல்கள் பல
1988ஆம் ஆண்டு கம்பஹா மாவட்டத்தின் பட்டலந்த பகுதியில் இருந்த விடுதியொன்றை இலங்கை பொலிஸ் தனது முக்கியமான சித்திரவதை முகாமாக பயன்படுத்தியது.
இலங்கை பொலிஸின் சிரேஸ்ட அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் அந்த சிறப்பு முகாமிற்கு பொறுப்பாக செயற்பட்டார்.
விடுதி வளாகத்தில் இருந்த 64 வீடுகள் சிலவற்றில் இலங்கை பொலிஸார் தங்கியிருந்ததுடன் சில வீடுகளில் பொலிஸாரால் கடத்திவரப்பட்ட இளைஞர்களும் யுவதிகளும் ஆடைகளின்றி பல துன்புறுத்தலுக்குள்ளாகி அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.
ரணில் விக்ரமசிங்க என்ற மனிதர் உண்மையில் யார் ?
கடந்த காலப்பதிவுகளில் நிகழ்ந்த அநியாயங்களுக்கும் அதன் அவலங்களையும் ஒரு சூத்திரதாரியாக சுமந்து நிற்கும் ரணில் விக்ரமசிங்க பற்றிய சில அறியப்படவேண்டிய உண்மைகளை பேசுகிறது ஐபிசி தமிழின் உண்மைகள்...



