ரணிலின் கைதினை அடுத்து விகாரையில் தஞ்சம் புகுந்துள்ள தென்னிலங்கை அரசியல்வாதிகள்
தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசி வேண்டி கொள்ளுப்பிட்டி வாலுகாராம விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
நேற்று பிற்பகல் இந்த பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து சிஐடியினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலைக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரணிலுக்காக பூஜை
இந்தநிலையில், ரணிலின் கைதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் பரப்பில் பல்வேறு கருத்தாடல்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிவேண்டி ஐக்கிய தேசியக் கட்சியினர் பூஜை வழிபாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்படி, கொள்ளுப்பிட்டி விகாரையில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் பெருமளவான ஐ.தே.கவினர் மற்றும் ரணில் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri