என்றோ சிறை செல்ல வேண்டிய ரணில்.. அடுத்து நடக்கப்போவது என்ன!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 1977ஆம் ஆண்டே கைது செய்யப்பட்டிருக்க வேண்டியவர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(25.08.2025) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“1977ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன மற்றும் ரணில் விக்ரமசிங்கவால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளுக்காக அவர்கள் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்று அவர்கள் கைது செய்யப்படவில்லை.
தப்பித்து வந்த ரணில்
இந்த கலவரத்தின் காரணமாக வடக்கில் வீடுகளை இழந்த மக்கள் இன்னும் பெரும் துயரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுக்கு ரணில் விக்ரமசிங்க பதில் கூற கடமைப்பட்டுள்ளார்.
1981ஆம் ஆண்டு ரணில், அமைச்சராக இருந்த போது யாழ். நூலகம் எரிக்கப்பட்டது. இதற்காகவும் ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை கலவரத்திற்காக ரணில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்போதும் அவர் கைது செய்யப்படவில்லை.
மேலும், உள்நாட்டு யுத்தம், படலந்த சித்திரவதை முகாம் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பிலும் அவர் கைது செய்யப்படாமல் தப்பித்து வந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



