மற்றுமொரு நிதிமோசடி வழக்கில் ரணிலுக்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த ரணில் விக்ரமசிங்க ஆகிய இரு அமைச்சர்களுக்கெதிராக ஊழல் குற்றங்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவில் (CIABOC) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் இணைந்து 1.7 பில்லியன் பெறுமதியான 1000 ஸ்மாட் பலகைகள் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்தலில் வெளிப்படத்தன்மை அற்றதால் இவை தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொருட்கள் கொள்வனவு
குறித்த முறைப்பாட்டை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் அத்தியட்சகர் நாயகம் பந்துல ஏரத் மேற்கொண்டுள்ளார்.
அது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த அரசின் தொழில்நுட்ப அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து ஸ்மாட் வகுப்பறை அமைப்பதற்காக ஸ்மாட் போட்,UPS,மடிக் கணனி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்காக அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்து தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் நிதியத்தில் குறித்த பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
கொள்வனவுக்கான முழு தொகை வரிகள் இல்லாமல் 1.4 பில்லியன் ரூபாவாகும், ஆனால் இது வரை அது தொடர்பில் 1.7 பில்லியன் செலவழிக்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றும் 700 மில்லியன் ரூபாய் வரிகள் இல்லாமல் சேவை கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.
முறைப்பாடு
மிகுதி பணம் செலுத்துவதற்கு முன்னர் அதில் வெளிப்படை தன்மை இல்லாததாலே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறுதற்கு இரு வாரங்களுக்கு முன் குறுகிய ஐந்து நாட்களில் இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த பொருட்கள் ஒரு வருடகாலமாக மத்தலகெதர ஆசிரியர் பயிற்சி கல்லுரி களஞ்சியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற காலத்தில் இவை வழங்கப்பட முடியாமல் போயிருக்கலாம் என தெரியவருகிறது என குறிப்பிட்டுள்ளார்.





இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
