ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க ஐ.நா.வை தூண்டிவிட்டுள்ள முக்கிய நாடுகள்
ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா.வை பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தூண்டிவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நடவடிக்கையின் மூலம், 30 நாட்களில் ஈரான் தனது அணுசக்தி நிலையங்களில் சர்வதேச ஆய்வாளர்களுக்கு அணுமதி வழங்கவிட்டால், கடுமையான பொருளாதார தனிமைப்படுத்தலுக்கு ஆளாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2025 அணுசக்தி ஒப்பந்தத்தின்படி, ஈரான் (3.67% செறிவூட்டப்பட்ட) 300 கிலோ யுரேனியம் மட்டுமே வைத்திருக்க வேண்டும்.
அனுமதி
ஆனால் தற்போது 45 மடங்கு அதிகமாகவும், 400 கிலோ அளவிற்கு கணக்கில் இல்லாத உயர் சுத்தமான யுரேனியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
IAEA ஆய்வாளர்கள் இஸ்ரேல் தாக்குதலுக்குப் பிறகு முக்கிய அணுசக்தி நிலையங்களை விட்டு வெளியேறியுள்ளனர். ஈரான் புஷேர் நிலையத்திற்கு மட்டும் அனுமதி வாழங்கியுள்ளது.
ஐ.நா. தடைகள்
மூன்று ஐரோப்பிய நாடுகளின் இந்த முடிவை, பிரித்தானிய வெளிவகார அமைச்சர் டேவிட் லாம்மி இன்று 28) ஈரானிய வெளிவிவகார துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சியிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் நியாயமற்றது என அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார்.
ஐ.நா. தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், ரஷ்யா மற்றும் சீனாவும் அவற்றை பின்பற்றவேண்டிய கட்டாயம் ஏற்படுவதுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகும் அபாயமும் உள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துளியளவும் பந்தா இல்லாமல் விசேஷத்தை கொண்டாடிய சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் குடும்பத்தினர் Manithan

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri
