அமெரிக்க பாடசாலையில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு! குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸார்
அமெரிக்க பாடசாலை ஒன்றில் கொடூர துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்றையதினம்(27) மினியாபோலிஸில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்தது.
இந்நிலையில், 23 வயது ரொபின் வெஸ்ட்மேன் சந்தேகநபராக தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குற்றவியல் வரலாறு
தாக்குதல் நடத்தியவருக்கு விரிவான குற்றவியல் வரலாறு இல்லை எனவும் அவர் தனியாக செயற்பட்டதாகவும் அமெரிக்க பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்துடன், அவர் முன்பு அதே பாடசாலையில் பணிபுரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டு அவர் அந்தப் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றதாகவும் முகநூல் பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாக்குதலை நடாத்துவதற்காக அவர் முன்கூட்டியே சம்பவ இடத்தின் வரைபடத்தை வரைந்து வைத்திருந்த காகித்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அவர் ஒரு திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மணிக்கு 160 கிமீ வேகத்தில் ஓடும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்.., சோதனை ஓட்டம் நடத்தும் ரயில்வே News Lankasri

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஒருவழியாக சாதித்து காட்டிய மைனா நந்தினி- மன்னிப்பு கோரிய ஏர் ஏசியா- கடைசியில் என்ன செய்தது? Manithan

மீனா தான் பெஸ்ட், நீ பிச்சைக்கார குடும்பம், ரோஹினியை வெளுத்த விஜயா... சிறகடிக்க ஆசை அதிரடி எபிசோட் Cineulagam
