ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos)

Dinesh Gunawardena Ranil Wickremesinghe President of Sri lanka
By Dharshika Sep 25, 2023 01:30 PM GMT
Report

 துணிச்சலும் தேசப்பற்றும் மிக்க சீதாவக்க ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

12,000 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்வு இன்று (25.09.2023) முற்பகல் ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரியில் நடைபெற்றது. “சீதாவக்க – சிசு அருணலு” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் என்பன சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளமையும் விசேட அம்சமாகும். பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் விநியோகிப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாணவர்கள் சிலருக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

பிள்ளையானை விமர்சிப்பவர்கள் 4ஆம் மாடிக்கு அழைப்பு: அம்பலமாகும் தகவல்கள் (Video)

பிள்ளையானை விமர்சிப்பவர்கள் 4ஆம் மாடிக்கு அழைப்பு: அம்பலமாகும் தகவல்கள் (Video)

சீதாவக்கவின் வரலாறு

இராஜசிங்க மன்னனின் ஆட்சிக்காலத்திற்கு இரண்டு நூற்றாண்டுகள் கடந்த பின்னர் சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்ட விடயமொன்றினால் வரலாற்றிலிருந்து இராஜசிங்க மன்னன் மறக்கடிக்கப்பட்டுள்ளார்.

போரில் வெற்றி பெற்றவர்களை ஒதுக்கி போரில் தோற்றவர்களை மாவீரர்களாக்கிய வரலாற்றை நாம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

சீதாவக்க இராசதானியின் தொல்பொருள் பெறுமதிகளை ஆராயுமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும், சீதாவக்கவின் வரலாற்றை பிரதிபலிக்கும் அருங்காட்சியகம் ஒன்றை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சீதாவக்க இராசதானி மற்றும் சீதாவக்க ராஜசிங்க மன்னரைப் பற்றிய தகவல்களை எழுதி அனுப்புமாறு பிரதேச பாடசாலை மாணவர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, சிறந்த படைப்புக்கு பரிசு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுமார் பன்னிரண்டாயிரம் பாடசாலை மாணவர்களுக்கு இன்று பாடசாலை உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகின்றன.

பிரதமரின் சீன விஜயம்

பிரதமரின் சீன விஜயத்தின் விளைவே இந்த உதவி கிடைத்துள்ளது.

ஹங்வெல்ல ,அவிசாவளை என்பது மேல் மாகாணத்தில் மேம்பட்ட கல்வி முறையைக் கொண்ட ஒரு பிரதேசமாகும். அதற்காகப் பெரிய அர்ப்பணிப்பை பிரதமர் செய்து வருகிறார்.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

கடந்த ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக பெருமளவு நிதியை ஒதுக்க முடியவில்லை. ஆனால், அரசாங்கமென்ற வகையில், அடுத்த ஆண்டு முதல் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ளோம்.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பற்றிப் பேசும் போது பாடசாலைக் கல்வி முறையும் டியுசன் கல்வி முறையும் செயற்படுகின்றன. கல்விக்காக அரசாங்கம் செலவழிக்கும் பணத்தைப் போலவே, பெற்றோரும் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக செலவிடுகின்றனர்.

இதனைக் கண்டறிந்து புதிய கல்வி முறையைத் தயாரிக்க எதிர்பார்க்கிறோம். கல்வியியலாளர்கள் மற்றும் மாணவர்களின் கருத்துகளைப் பெறவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு தேவையான தொழில்சார் கல்வியை வழங்க தேவையான சூழலை உருவாக்க வேண்டும்.

 தொழிற்பயிற்சி கேந்திர நிலையம்

தொழிற்கல்வியை மறுசீரமைத்து இலங்கையை தொழிற்பயிற்சி கேந்திர நிலையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதன் மூலம் இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான தொழில்சார் அறிவைக் கொண்ட ஒரு பிரஜையை உருவாக்கும் திறன் எமக்குக் கிடைக்கும்.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

ஆவுஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் எதிர்கால சந்ததியினரை நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உருவாக்குகின்றன. ராஜசிங்க மன்னன் பற்றிய கவிதை ஒன்று இங்கு வாசிக்கப்பட்டது.

அன்று ராஜசிங்க மன்னர் இருந்திருக்காவிட்டால் இன்று இலங்கை மொசாம்பிக் அல்லது அங்கோலா நாட்டைப் போன்று மாறியிருக்கும். முழுத் தெற்காசியாவிலும் போர்த்துக்கேயர்களை தோற்கடித்த ஒரே மன்னன் இராஜசிங்க மன்னன் தான்.

சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம்

சீதாவக்க இராசதானியினால் நம் நாட்டின் சுதந்திரம் பாதுகாக்கப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு அது தொடர்பான அறிவை வழங்கும் வகையில் சீதாவக்க பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளேன். சீதாவக்க இராசதானி பற்றி பல புராணக்கதைகள் உள்ளன.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

குறிப்பாக முல்லேரியா போர் இடம்பெற்ற இடத்திலும், தந்துரேயுத்தம் இடம்பெற்ற இடத்திலும் நினைவுச் சின்னங்களை அமைக்குமாறும் பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவுக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தொல்பொருள் திணைக்களத்திற்கும் தேவையான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன.நாம் வரலாற்றை மறந்துவிடக் கூடாது.

மேலும், இந்நாட்டு மன்னர்கள் ஆற்றிய சேவையை நாம் மறந்துவிடக் கூடாது. ராஜசிங்க மன்னருக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சூளவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமொன்றின் காரணமாக, ராஜசிங்க மன்னர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.இந்த வரலாற்றைப் பற்றி நாம் சிந்திக்கவில்லை.

 வாழ்க்கைச் சரிதம் குறித்து மறு ஆய்வு 

தோற்றவர்கள் வீரர்களாக போற்றப்படுகின்றனர். போரில் வெற்றி பெறுபவர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். எனவே, சீதாவக்க ராஜசிங்க மன்னரின் வாழ்க்கைச் சரிதம் குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

குறிப்பாக சீத்தாவக்க புராதனத்தன்மையை வெளிக்கொண்டு வருவதற்கான பணிகளை ஆரம்பிக்குமாறு நான் தொல்பொருள் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளேன். ஏனென்றால் இன்னும் சில வருடங்களில் இது ஒரு நகரமாக மாறிவிடும்.

கோட்டை நகருக்கு நடந்தது சீத்தாவக்கவுக்கும் நடக்க வாய்ப்புள்ளது.எனவே, அதற்கு முன்னர் இந்தப் பணியை ஆரம்பிக்க வேண்டும். எதிர்காலத்தை உருவாக்கும்போது, கடந்த காலத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அனைத்து சீதாவக்க பாடசாலைகளின் பிள்ளைகளையும் சீதாவக்க இராசதானி மற்றும் சீத்தாவகவின் வரலாறு பற்றிய விடயங்களை எழுதி எங்களுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவற்றில் சிறந்த படைப்பை சமர்ப்பிக்கும் பாடசாலைக்கு பரிசு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன் என்றார்.

பிரதமரின் கருத்து

பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டதாவது:

நாட்டின் சிறந்த முதலீடு கல்விதான். அதற்காக அரசாங்கம் எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும். இன்று சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் பாடசாலை உபகரணங்கள் விநியோகப்படுகின்றன. அதற்கு ஜனாதிபதி வருகை தந்ததை நான் பாராட்டுகின்றேன்.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

களனி பிரதேசத்தின் முதலாவது மத்திய கல்லூரியாக ஹங்வெல்ல ராஜசிங்க மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பெருமளவிலான மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர்.

இன்று இப்பாடசாலையில் இருந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரியின் அபிவிருத்திக்கு அனைத்து அரசாங்கமும் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளன என்பதை நினைவு கூறவேண்டும் என்றார்.

சீனத் தூதுவரின் கருத்து

இலங்கைக்கான சீனத் தூதுவர் (Qi Zhen Hong) தெரிவித்ததாவது,

சீனாவும் இலங்கையும் எப்போதும் பரஸ்பரம் மதிப்பதோடு நம்பிக்கையுடன் செயற்படும் நட்பு நாடுகள் என்பதைக் கூற வேண்டும். இந்த இரு நாடுகளும் எப்போதும் வலுவான கூட்டாண்மை மூலம் பரஸ்பரம் உதவுகின்றன.

ராஜசிங்க மன்னனின் வாழ்க்கை குறித்து மீள் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் : ஜனாதிபதி(Photos) | Ranil Wickremasinhe Speech Sithavakka Raja Sinha

இலங்கை மக்கள் தற்போது தற்காலிக சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையின் கீழ், அந்த சவால்களை எல்லாம் முறியடித்து நாட்டு மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியும் என நான் நம்புகிறேன்.

நிலைபேறான அபிவிருத்தியை அடைவதற்கும் அத்துடன் தற்போதுள்ள பொருளாதார பிரச்சினைகளை வெற்றிகொள்வதற்கும் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவை வழங்குகிறது என்றார்.

அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த: வெளியான காரணம்

அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட மகிந்தானந்த: வெளியான காரணம்

நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் குமார, யாதாமினி குணவர்தன, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆஃப் த எயார்ஃபோர்ஸ் ரொஷான் குணதிலக்க, ராஜசிங்க மத்திய கல்லூரியின் அதிபர் ஜகத் சூரசேன மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 

சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்கா கவலை

சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணம் குறித்து அமெரிக்கா கவலை

பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US