பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டரின் மர்ம மரணம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடலை அவர்களது குடும்பத்தினரிடம் கையளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம், சிஐடியினருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
தினேஷ் சாப்டரின் உடலை கையளிக்க உத்தரவு
பிரேதப் பரிசோதனைகள் முடிவடைந்ததன் காரணமாக தினேஷ் சாப்டரின் உடலை கையளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் உயிரிழந்த வர்த்தகர் தினேஷ் சாப்டரின் உடல் கடந்த மே மாதம் 25ஆம் திகதி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீண்டும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி, பொரளை கனத்தை மயானத்திற்கு அருகில் அவரது காருக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் வர்த்தகர் தினேஷ் சாப்டர் மீட்கப்படட்டார்.
அதன் பின்ர், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் அன்று இரவே அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 7 மணி நேரம் முன்

சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
